விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவை மிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தெனாலிராமன் என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் ஒருவர். அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன.